தேசிய விருது பெற்ற பிரபல நாடகக் கலைஞர் காலமானார்!!

 
உத்தாரா பாக்கர்


பிரபல நாடகக் கலைஞரும், பழம் பெரும் நடிகையுமான உத்தாரா பார்க்கர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79. இவர் தேசிய நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பை கற்றுக் கொண்டவர்.  உத்தாரா பாக்கர், முகிஹாமந்திரி, மேனா குர்ஜாரி, துக்ளக் உட்பட  பல்வேறு நாடகங்களில் பல்வேறு வேடங்களில் நடித்தார். மேலும், தோகி  சதாசிவ் அம்ராபுர்கர் மற்றும் ரேணுகா தஃப்தார்தார், உத்தராயன் , ஷெவ்ரி  ரெஸ்டாரன்ட் போன்ற மராத்தி படங்களில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

rip

இவர் தனது நாடக மற்றும் சினிமாவில் நடித்ததற்காகப் பல்வேறு உயர் விருதுகளை பெற்றவர். இவர் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் 1984 ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றவர்.
இவர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.  கடந்த சில தினங்களாக புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். உத்தரா பாக்கரின் மறைவு இந்தியத் திரைப்படத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும்,  அவரது மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web