நேற்று கடலூர், இன்று சென்னை ... பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு.!
தமிழகத்தில் பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா. இவர் சென்னையில் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த இவரை போலீசார் பிடிக்க சென்ற போது தப்பி ஓட முயற்சித்தார். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஐகோர்ட் மகாராஜா மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் ரவுடி மகாராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் எனவும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயற்சித்த கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அதாவது, தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து, பொதுமக்கள் நடமாடி முடியாத அளவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆளும் திமுகவை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான், நேற்று கடலூர், இன்று சென்னை என அடுத்தடுத்து ரவுடிகள் மீது, போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
