பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு... பெரும் பரபரப்பு!
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஸ்கரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். போலீசார் சுட்டதில் அவரது இரண்டு கால்களில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குறிஞ்சிப்பாடியில் காய்கறி இலவசமாக தர மறுத்த கடைக்காரர் ரமேஷை, சுபாஸ்கர் நேற்று வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் தப்பி ஓடியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தப்பிச் சென்ற சுபாஸ்கரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீசார் மீது சுபாஸ்கர் அரிவாளால் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை பிடித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
