வைரல் வீடியோ... குட்நியூஸ் சொன்ன பிரபல சீரியல் நடிகை கண்மணி மனோகரன் !

 
கண்மணி மனோகரன்
 

பிரபல தனியார் தொலைக்காட்சியில்  சக்கைபோடு போட்ட சீரியல்களில் ஒன்று  பாரதி கண்ணம்மா.  2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 2023 வரை சுமார் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது. விஜய் டிவியில் அதிக நாட்கள் ஓடிய சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியல் குறிப்பிடத்தக்கது.  இந்த சீரியலில் அஞ்சலி என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் கண்மணி மனோகரன். அவர் நடித்த முதல் சீரியலான பாரதி கண்ணம்மாவிலேயே  பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் கண்மணி.
 

பாரதி கண்ணம்மா சீரியல் ஹிட் ஆனதால் கண்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புக்கள் அமைந்தன.  பிசியாக நடித்து வந்த அஞ்சலிக்கு கடந்த ஆண்டு  தன்னுடைய காதலனான அஸ்வத்தை பெற்றோர் சம்மதத்துடன்  கரம்பிடித்தார். கண்மணியின் கணவர் அஸ்வத் சன் டிவி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.கண்மணி - அஸ்வத் ஜோடி திருமணமாகி 6 மாதம் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில்   வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள அவர்கள், அங்கு எடுத்த வீடியோவை  பதிவிட்டு குட் நியூஸ் சொல்லி உள்ளனர்.

கண்மணி மனோகரன்

அதன்படி நடிகை கண்மணி கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வயிற்றில் குழந்தையோடு கண்மணி நின்றுகொண்டிருக்க, உற்சாகம் பொங்க வந்து அவரின் வயிற்றில் முத்தமிட்டு தாங்கள் இருவரும் விரைவில் பெற்றோர் ஆக உள்ள தகவலை உறுதி செய்துள்ளார்  அஸ்வத். இதனையடுத்து கண்மணிக்கும், அஸ்வத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.  கண்மணி - அஸ்வத் ஜோடி திருமணமான பின் முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ளனர். அந்த முதல் ட்ரிப்பிலேயே அவர்கள் தாங்கள் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளனர் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?