பிரபல பாடகர் கரிசல் கிருஷ்ணசாமி காலமானார் !

 
கிருஷ்ணசாமி

பிரபல நாட்டுப்புற இசை கலைஞர் கரிசல்கிருஷ்ணன் சாமி   உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இவரின் வயது 60.  இவர் வானொலி, திரைப்படங்கள் மற்றும் முற்போக்கு இயக்க மேடைகளில் பல பாடல்களை பாடி உள்ளார்.
சமூக கருத்துள்ள பல பாடல்களை பாடியதால் கரிசல் கிருஷ்ணசாமி என அழைக்கப்பட்டார்.  இவருடைய மறைவுக்கு சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் மதுரை எம்.பி சு வெங்கடேசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் ‌

கரிசல்குயில்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா, நரிகுளம் கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பாடகர் கிருஷ்ண சாமி அவர்கள்.   அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு வயது 67.  பொதுவுடமைகளின் பாடகர்  கரிசல் குயில் இசைக் குழு மூலம் இடதுசாரி மற்றும் தமுஎகச போன்ற முற்போக்கு மேடைகளில் உழைக்கும் மக்களின் பாடுகளை பாடல்களாக பாடியவர் . தொடர்ந்து 40 ஆண்டுகளாக  தமிழகம் முழுவதிலும் உள்ள இடதுசாரி மேடைகளில் அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்று முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டிலும் அவரது குரல் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சாஸ்திரிய சங்கீத விற்பன்னர்கள் கூட அதிசயிக்கும் அளவுக்கு செவ்வியல் இசையில் தேர்ந்திருந்தார். கவிஞர்களின் எழுத்துக்களுக்கு உயிரோட்டம் கொடுத்தவர். கவிஞர்கள் பரிணாமன், நவகவி, ரமணன், வையம் பட்டி முத்துச்சாமி, ஏகாதசி, பிரளயன் ஆகியோரின் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தவர். டாக்டர்.கே.ஏ.குணசேகரன் பட்டறையில் மெரு கூட்டப்பட்டவர்.  கரிசல்குயில் பாடல்கள் 1980 -1990 காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமத்து இளைஞர்களின் மனதை ஆட்டிப் படைத்தது. அவரது குரலின் பாவமும், உணர்வும், நெஞ்சைத் தொட்ட பாடல்களாகவே அமைந்தன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?