பிரபல பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம்! முதல்வர் இரங்கல்!

 
சாய்சந்த்

பிரபல பாடகரும், தெலுங்கானா மாநில கிடங்கு கழக தலைவருமான சாய்சந்த் திடீர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 39.  இவர் புதன்கிழமை தனது குடும்பத்துடன் நாகர் கர்னூல் மாவட்டம் கருகொண்டாவில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றிருந்தார். தெலுங்கானா இயக்கத்தில் பொது மற்றும்   ​​முற்போக்கு உணர்வு கொண்ட சாய்சந்த், துந்தம் நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.   இதுவரை பல பாடல்களை பாடியுள்ளார்.   அதில் 'ரதி பொம்மலோனா கொலுவாயா சிவா' என்ற பாடலின் மூலம் பெரும் புகழ் பெற்றார்.


 


ஜூன் 28ம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்  உடல்நிலை சரியில்லாததால்  உடனடியாக நகர்கர்னூலில்   தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை கச்சிபௌலியில் உள்ள கேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக   மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவரது மறைவு குறித்து முதல்வர்  கே.சந்திரசேகர் ராவ், சாய்சந்தின் திடீர் மரணம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.   தெலுங்கானா மாநில போராட்டத்தின் ஒரு பகுதியாக கலாச்சார இயக்கத்தில் சாய்சந்தின் பங்கு விலைமதிப்பற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “தெலுங்கானா சமூகம் ஒரு சிறந்த பாடகரையும் கலைஞரையும் இழந்துவிட்டது. அவர் இயக்கத்தின் போது தெலுங்கானா உணர்வை மக்களிடையே கொண்டுவந்ததில் பெரும் பங்கு வகித்தார்.   அவர் பாடல்களின் மூலம்  புதிய உயரத்திற்கு வந்து கொண்டிருந்த போது  ​அவரை இழந்தது துரதிர்ஷ்டவசமானது,” எனக் கூறியுள்ளார்.  சாய்சந்தின் பாட்டு   இல்லாமல் தனது பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதில்லை எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  சாய்சந்த் செப்டம்பர் 20, 1984 இல் வனபர்த்தி மாவட்டத்தின் அமர்சிந்தாவில் பிறந்தவர்.  மாணவர் நாட்களிலிருந்தே ஒரு கலைஞராகவும் பாடகராகவும் புகழ் பெற்றவர். தெலுங்கானா இயக்கத்தின் 2ம் கட்டத்தில், தனது பாடல் மற்றும் நடனம் மூலம் மக்கள் மத்தியில் தெலுங்கானா குறித்த விழிப்புணர்வை உருவாக்கியவர்.  


 

 

இவரது மறைவிற்கு தெலங்கானா சட்டப் பேரவைத் தலைவர் குத்தா சுகேந்தர் ரெட்டி, சட்டப்பேரவைத் தலைவர் போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, அமைச்சர்கள் எஸ்.நிரஞ்சன் ரெட்டி, வி.ஸ்ரீனிவாஸ் கவுட், ஜி.ஜெகதீஷ் ரெட்டி, வெமுலா பிரசாந்த் ரெட்டி, கங்குலா கமலாகர், ஏ.இந்திரகரன் ரெட்டி, தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், கொப்புலா ஈஸ்வர், எர்ரபெல்லி தயாகர் ராவ், பி. சபிதா இந்திரா ரெட்டி, சத்யவதி ரத்தோட் மற்றும் பல பிஆர்எஸ் எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற தலைவர்கள் பலரும்  சாய்சந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web