பிரபல பாடகர் புற்றுநோயால் காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!
கிராமி விருது பெற்ற தி மேவரிக்ஸ் இசைக்குழுவின் முன்னணி பாடகரும் ஆத்மாவுமான ரவுல் மாலோ, டிசம்பர் 8-ம் தேதி இரவு 60 வயதில் காலமானார். ஜூன் 2024 முதல் பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், ஹூஸ்டனில் சிறப்பு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியை அவரது மனைவி பெட்டி மாலோ, பேஸ்புக் பதிவின் மூலம் உறுதிப்படுத்தினார்

“இந்த முறை வானில் மேடை ஏற அழைக்கப்பட்டிருக்கிறார். கழுகைப் போல உயர பறக்கிறார்,” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் பெட்டி. வாழ்க்கை, அன்பு, இசை, குடும்பம், சாகசம் என அனைத்தையும் முழுமையாக அனுபவித்த மனிதர் ரவுல் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் பாடல்களும் சிரிப்பும் என்றும் நினைவில் நிற்கும் என்றும் ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

கியூப-அமெரிக்க பின்னணியை சேர்ந்த ரவுல் மாலோ, 1989-ல் தி மேவரிக்ஸ் இசைக்குழுவை இணைந்து தொடங்கினார். நாட்டுப்புறம், லத்தீன், ஸ்விங் இசை கலந்த தனித்துவமான பாணி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. “All You Ever Do Is Bring Me Down”, “Dance the Night Away” போன்ற பாடல்கள் காலத்தை வென்றவை. அவரது குரல் ஓய்ந்தாலும், இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
