பிரபல ஆன்மிக இலக்கிய எழுத்தாளர் சங்கரிபுத்திரன் காலமானார்!

ஆன்மிக-இலக்கிய எழுத்தாளர் சங்கரிபுத்திரன் பிரபல ஆன்மிக எழுத்தாளர். இவர் ஏராளமான ஆன்மிகத் துணுக்குகளை எழுதியவரும் கூட. சேஷன் சம்மான் விருது பெற்ற திரு சங்கரிபுத்திரனின் இயற்பெயர், சுப்பிரமணியன். ஆனால், சங்கரிபுத்திரன் என்றால் தான் பலருக்கும் தெரியும். காரணம், இந்தப் பெயரில் தான் கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலை, இலக்கியம், ஆன்மிகம் குறித்த பல பத்திரிகைகளில் துணுக்குகளை எழுதி வருகிறார். இவரது அம்மா பெயர் சங்கரி. அவர் மீதான அபிமானம் காரணமாக, சங்கரிபுத்திரனாகி விட்டார்.
புதுக்கோட்டை அருகில் உள்ள ஆற்றங்குடியில் வசித்து வருபவர். 10 வயதாக இருக்கும்போது, அங்கு வந்த காஞ்சி மகா பெரியவர், துறு துறுவென இருந்த இவரை அருகில் அழைத்து, 'இதை சத்தம் போட்டு படி...' என்று பத்திரிகையில் வந்த ஆன்மிக கட்டுரை ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அவரும் சத்தமாக படிக்க, 'அருமை...' எனப் பாராட்டினார். பெரியவர், 'உனக்கு, மடத்திலிருந்து மாதா மாதம் ஒரு புத்தகம் வரும். அதை இதேபோல சத்தம் போட்டு, இந்த கிராமத்தில் உள்ள படிக்கத் தெரியாதவர்களின் வீடுகளுக்கு போய் படித்துக் காட்ட வேண்டும்...' என கேட்டுக் கொண்டார்.
கிராமத்தில் இருந்தவரை, பெரியவர் கட்டளையை நிறைவேற்றினார்.
அப்போது ஏற்பட்ட இந்த பழக்கம் தான், இப்போது வரை தொடர்கிறது. சென்னை வந்தபின், மின் வாரியத்தில் வேலை செய்யும்போது, சர்குலேஷன் லைப்ரரி நடத்தி, பலருக்கும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.அலுவலக வேலை முடிந்ததும், சமய சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு சென்று விடுவார். ஒருமுறை நண்பர் சீனிவாசனின் துாண்டுதலில், தான் கேட்டு ரசித்த சொற்பொழிவின் ஒரு பகுதியை, பத்திரிகைக்கு துணுக்காக எழுதி அனுப்பினார். அது வெளியாகவே, அது முதல் துணுக்கு எழுத்தாளரானார். பல பத்திரிகைகளில் இவரது துணுக்குகள் வெளியாகியுள்ளன.
90 சமயச் சொற்பொழிவாளர் மற்றும் 40 இசைக் கலைஞர்களை இவர் பேட்டி எடுத்து எழுதிய தொடர், மிகவும் வரவேற்பை பெற்றது; பின்னாளில் இது புத்தகமாகவும் வந்தது. 'இலக்கிய தேனீ, துணுக்கு சக்கரவர்த்தி' எனப் பல பட்டங்களை பெற்றவர்.
அஞ்சலி செலுத்த அணுக வேண்டிய முகவரி
தொலைபேசி எண்: 99943 94779
முகவரி: பழைய எண் 6 ஏ. புதிய எண்.14.
கோகுலம் காலனி,
மேற்கு மாம்பலம்,
சென்னை 600 030
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!