பிரபல மல்யுத்த வீரர் திடீர் மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஒசாமு நிஷிமுரா . இவர் கடந்த ஓராண்டாக உணவுக்குழாய் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். மிகக் கடுமையாக அவதிப்பட்டு வந்த ஒசாமு தனது 53 வயதில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒசாமு நிஷிமுரா அங்கேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு புற்றுநோய் பாதிப்பு 4 வது ஸ்டேஜில் தான் கண்டறியப்பட்டது. இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் வரை மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு சக வீரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!