கார் விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர்!! அதிர்ச்சி!!

 
டிடிஎப் வாசன்

பிரபல யூடியூபர்   டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில்  பலமுறை காவல்துறையின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அவர் 2கே கிட்ஸ்க்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.  விமர்சனங்களைத் தாண்டி டிடிஎஃப் வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. 

டிடிஎப் வாசன்


சமீபத்தில் இவர் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் நடிகராகவும் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.  இதற்கான  போஸ்டர்  வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பைக்கில் பறந்தபடி டிடிஎப் வாசன் நிற்கும் அந்த போஸ்டரை பார்த்து படத்திலும் இவர் பைக்கராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சென்னையில் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டிடிஎப் வாசன்

சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்றுகொண்டு இருந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் பைக்கில் சென்றவருக்கு காயமடைந்தது. காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் டிடிஎப் வாசன் காயங்களின்றி  தப்பினார். கார் விபத்துக்குள்ளானவுடன் அவர் அதில் இருந்து கீழே இறங்கி அங்கு வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து  காட்சிகளும் சமூக வலைதளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்