ரசிகர்கள் வேற... வாக்காளர்கள் வேற... அரசியலுக்கு வந்த பிறகு தான் இதை புரிஞ்சிகிட்டேன்...போட்டு உடைத்த கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இதற்கான கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனம் திறந்து பல விஷயங்களை பேசினார்.அதில் ” நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன் அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும்.
அதைப்போல, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என் அனுபவத்தில் நான் புரிந்துகொண்டது ரசிகர்கள் வேறு.. வாக்காளர்கள் வேறு. நான் அரசியலுக்கு வந்த பிறகு இதனை தெரிந்து கொண்டேன்” மாணவர்கள் தான் நாளைய தமிழகம். அவர்களுக்கு என்ன இஷ்டமோ அதை தான் கற்றுக்கொடுக்க வேண்டும். நான் சொல்வதை தான் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் காசு தரமாட்டேன் எனக் கூறும் அரசுக்கு மக்கள், நாளைய தலைமுறை பதில் சொல்வார்கள். மாற்றத்திற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தகுதி கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறது.”
அதன்பின், இந்தி திணிப்பு விவகாரம் குறித்து ” இந்தித் திணிப்பை தடுத்தவர்கள் தமிழர்கள். மொழிக்காக உயிரையே கொடுத்த மக்கள் தமிழ்நாட்டு மக்கள். தனக்கு எந்த மொழி வேண்டும், எது தேவை என்பதை முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு. தமிழ் மொழி பெருமையை யாராலும் இறக்க முடியாது. இதனை இக்காட்டான காலம் என சொல்ல மாட்டேன் . இதனை தமிழ்நாடு முன்னரே பார்த்துவிட்டது.” என பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!