ரசிகர்கள் எதிர்பார்ப்பு... இன்று வெளியாகிறது PR04 படத்தின் பர்ஸ்ட் லுக்!

இன்று காலை பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதனையடுத்து 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். ‘லவ் டுடே’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பிரதீப் ரங்கநாதனை இளைஞர்களிடையே பெருமளவில் கொண்டு சென்றது.
Associating with the prestigious @MythriOfficial . Launching talented and sincere @Keerthiswaran as director for #PR04 #PR04 'FIRST SHOT BOOM' out tomorrow at 11.07 AM 💥💥 #FirstShotBoom#PR04#MythriTamil02
— Pradeep Ranganathan (@pradeeponelife) March 25, 2025
A #SaiAbhyankkar musical
Produced by @MythriOfficial
⭐️ing… pic.twitter.com/XkWz0pRcLS
அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'டிராகன்'. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடிக்க வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தில் மமிதா பைஜு நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை 11.07 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!