'ஜனநாயகன்' ரிலீஸ் ஆவதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி!

 
ஜனநாயகன்

பொங்கல் ரிலீஸுக்கு முன்னதாக ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு, தணிக்கைச் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். குழுவின் அறிவுறுத்தலின்படி தேவையான மாற்றங்களைச் செய்து படக்குழுவினர் மீண்டும் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஜனநாயகன்

ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு ஏற்கனவே அறிவித்து விட்டது. இதற்கான திரையரங்க ஒப்பந்தங்கள் (Theatre Agreements) மற்றும் முன்பதிவு தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சான்றிதழ் கிடைக்காதது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஜனநாயகன்' படத்தின் பெயரும், அதன் டீசரும் ஏற்கனவே அரசியல் ரீதியாகப் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. தணிக்கைக் குழுவின் இந்தத் தாமதத்திற்குப் படத்தின் அரசியல் வசனங்களே முக்கியக் காரணம் எனத் திரையுலகினர் கருதுகின்றனர். சான்றிதழ் கிடைப்பதில் இன்னும் ஓரிரு நாட்கள் தாமதமானால், படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!