கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்... ‘ஜனநாயகன்’ 2026 பொங்கல் ரிலீஸ் ...!

 
ஜனநாயகன்

 தமிழ் திரையுலகில் முண்ணனி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தவெக என்னும் அரசியல் கட்சியை தொடங்கி 2026 தேர்தலுக்காக திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில் அவரது கடைசிப்படமாக உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகன்

இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. முழு நேர அரசியல் களத்துக்கு வர முடிவு செய்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், தனது திரையுலகப் பயணத்தை நிறைவு செய்யும் வகையில்  யக்குநர் ஹெ.வினோத்துடன் கரம் கோர்த்துள்ளார். ‘ஜனநாயகன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு  பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன.


ஜனநாயகன்

‘ஜனநாயகன்’ என்ற தலைப்புக்காகவே திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இத்திரைப்படம். இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026  ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது என, வண்ணமயமான போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?