ரசிகர்கள் உற்சாகம்!! சென்னையில் 2 போட்டிகள்!! பிசிசிஐ அதிரடி!!

 
ஐபிஎல்

டி20 ஐபிஎல் போட்டிகள் சீசன் 16 திருவிழா கோலாகலமாக தொடங்கப்பட்டு இந்தியாவின் முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன . ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவு அணிகளுடன் தலா ஒரு போட்டியும், அடுத்த பிரிவில் உள்ள அணியில் தலா 2 போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும்.

ஐபிஎல்

அந்த வகையில்  இதுவரை 28 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. அதன்படி  ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடும்.  லீக் சுற்று முடிவில் இதில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறத் தொடங்கும். இந்நிலையில், ஐபிஎல் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டியின் அட்டவணையை அறிவித்துள்ளது பிசிசிஐ.

ஐபிஎல்
அட்டவணைப்படி பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டி மற்றும் மே 24ம் தேதி எலிமினேட்டர் போட்டி  என 2 போட்டிகள்  சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மே 26ம் தேதி 2வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28ம் தேதி இறுதிப் போட்டியும் அகமதாபாத்தில் நடைபெறும் என பிசிசிஐஅறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web