போயஸ் கார்டனில் திரண்ட ரசிகர்கள்... நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து!

 
ரஜினி

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்களுக்கு, வெளியே வந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது பிறந்தநாள் மற்றும் விசேஷ நாட்களில் ரசிகர்கள் குவிவது வழக்கம்.


அதுபோல புத்தாண்டு தினமான இன்று அவர் வீட்டின் முன்பு வாழ்த்துகளைக் கூற ரசிகர்கள் திரண்டுள்ளனர். இதனையடுத்து ரஜினிகாந்த், வழக்கம் போல ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் வைத்து மகிழ்ச்சியுடன் தனது புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் விஜயகாந்த் மறைந்ததையடுத்து, அனைத்து படத்தின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தனது வீட்டின் முன்பாக குவிந்த ரசிகர்களுக்கு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் நடிகர் ரஜினி காந்த்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web