நடிகர் பிரபாஸூக்கு திடீர் உடல் நலக் குறைவு! சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்! படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
பிரபாஸ்

பிரபல டோலிவுட்  நடிகர் பிரபாஸ் திடீர் உடல்நலக் குறைவால், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகர் பிரபாஸூக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரபாஸ்  தற்போது  கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்திலும், நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  

பிரபாஸ்

இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸுக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக சலாம் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. ஏற்கனவே கடந்த மாதமும் இவ்வாறு உடல்நல குறைவு காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சிகிச்சைக்கு வெளிநாடு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ்

 ஓய்வு என்பதே இல்லாமல் தொடர்ந்து  அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருவதால் அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இந்த தகவலால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். விரைவில் நலம் பெற வேண்டி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web