கூட்ட நெரிசலில் நடிகையிடம் அத்து மீறிய ரசிகர்கள்.... பகீர் வீடியோ!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாசாப்’ படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் உள்ள வணிக வளாகத்தில் பாடல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்தார்.
#TheRajaSaab లోని #SahanaSahana సాంగ్ లాంచ్ అనంతరం మాల్ నుంచి బయటకు వచ్చిన #NidhhiAgerwal తో అసహ్యకరంగా, అభ్యంతరకరంగా ప్రవర్తించిన ఫ్యాన్స్ ముసుగులోని పోకిరీలు. నిధి ఎంత అసౌకర్యానికి గురయ్యిందో కారులో కూర్చొని ఆమె చూపించిన ఎక్స్ప్రెషన్స్ స్పష్టం చేస్తాయి. ఆమెను అక్కడకు రప్పించిన… pic.twitter.com/lN97GiTPyh
— Yagna The Journalist (@yagnamurthy) December 18, 2025
நிகழ்ச்சி முடிந்து காருக்கு செல்ல முயன்றபோது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். கடுமையான கூட்ட நெரிசலில் சிலர் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரை மறைமுறையாக தொட முயன்றதும், துப்பட்டாவை இழுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில நொடிகளில் பாதுகாப்பாக காரில் ஏறிய நிதி அகர்வால், ரசிகர்களின் நடத்தை குறித்து கடும் கோபம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகையைச் சூழ்ந்து நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டவர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
