கடற்கரையில் குவியும் ரசிகர்கள்... மெகா ஸ்கிரீனில் ஐசிசி சாம்பியன் டிராபி இறுதிப்போட்டி நேரலை!

 
இந்தியா நியூசிலாந்து

இன்று துபாயில்  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில், இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஆர்வமுடன் போட்டியைக் கண்டு வருகின்றனர். அதே போன்று நியூசிலாந்து அணியும் வெற்றிக்கான முனைப்புடன் விளையாடி வருகிறது. 

இந்தியா நியூசிலாந்து

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடி வருவதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. இன்று பிற்பகல் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கிய நிலையில், சென்னை விவேகானந்தா மாளிகைக்கு எதிரே மெரினா கடற்கரையிலும், பெசன்ட்நகர் கடற்கரையில் போலீஸ் பூத் அருகிலும் மெகா ஸ்கிரீனில் இன்றைய போட்டி நேரலை ஒளிப்பரப்பட்டு வரப்படுகிறது. இந்த இரு இடங்களில் திரையிடப்பட்டுள்ள போட்டியின் நேரலையை அதிகளவிலான ரசிகர்கள் குவிந்து பார்த்து வருகின்றனர். 

இந்தியா நியூசிலாந்து

மாலை நேரத்தில் வெயில் குறைந்து குளுமை துவங்கிய பின்னர், வழக்கமாக கடற்கரைக்கு வருபவர்களை விட அதிகளவிலான மக்கள் போட்டியை மெகா ஸ்கிரீனில் கடற்கரையில் காற்று வாங்கியபடியே பார்த்து ரசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்கும்படி  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு முன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web