பிரபாஸ் படத்திற்கு ஆரத்தி எடுத்த ரசிகர்கள்... பற்றி எரிந்த திரையரங்கம்... பரபரப்பு!

 
பிரபாஸ்

திரையில் பிரபாஸ் தோன்றியதும் ரசிகர்களின் உற்சாகம் எல்லை கடந்தது. பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடித்த ‘தி ராஜாசாப்’ படம் கடந்த 9ம் தேதி வெளியாகி பல மொழிகளில் திரையிடப்பட்டது. மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடித்துள்ளனர். சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


ஒடிசாவில் உள்ள ஒரு தியேட்டரில் முதல் காட்சியை காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். பிரபாஸ் திரையில் தோன்றியதும் விளக்குகளை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும், ஆரத்தி எடுத்தும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தியேட்டருக்குள் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் பீதி அடைந்த ரசிகர்கள் உயிர் தப்பிக்க வெளியே ஓடினர். தகவல் அறிந்து உடனடியாக தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. ரசிகர்களின் அதீத உற்சாகமே இந்த பரபரப்புக்கு காரணமாக அமைந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!