ரசிகர்கள் அதிர்ச்சி!! ஐபிஎல் தொடரிலிருந்து பும்ரா விலகல்!!

 
பும்ரா

ஐபிஎல் சீசன் மார்ச்சில் தொடங்கப்பட உள்ளது. இதில் விளையாட உள்ள கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது பும்ரா ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா.

பும்ரா

 இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. டி20யில் கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக அவர் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.   மார்ச் 31ம் தேதி 16வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில்  அதில்  ஜஸ்ப்ரித் பும்ரா பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து   ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ள  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா கலந்து கொள்ளப்போவதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பும்ரா

மேலும்  முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து விரைவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web