விவசாயக்கடன் தள்ளுபடி? இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்!
தமிழகத்தில் மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். அடுத்த 2 ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைப்போல, பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என முக்கிய அறிவிப்புகள் வெளியானது.

அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இது தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், வேளாண்மைக்கு தனியாக தாக்கல் செய்யப்படும் 5வது பட்ஜெட் ஆகும்
இந்த பட்ஜெட்டில், வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா? என்ற கேள்வியுடன் தான் விவசாயிகள் காத்துகிடக்கின்றனர். 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகளை அமைக்க மானியங்கள் வழங்கப்பட்டன. ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதே போல் தமிழகம் முழுவதும் 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
