பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது!
Jun 25, 2025, 12:40 IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பூச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயியைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்த போலீசாரின் விசாரணையில், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி, தானே வளர்த்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொடை ரோடு அருகே நாகராஜ் என்கிற விவசாயி தனது தோட்டத்தில் பூச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். நாகராஜைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா செடிகளையும் கைப்பற்றி போலீசார் அழித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!