விவசாயிகளுக்கு திருமண உதவித்தொகை, கல்வி நிதியுதவி... அசத்தல் சலுகைகள்!

 
விவசாயி

தமிழக அரசு  விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி அத்துடன்  பல்வேறு சலுகைகளையும்  அறிவித்து  வருகிறது. அந்த வகையில் தற்போது முதல்வரின்  உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உழவர் அட்டை மற்றும் பயனாளிகள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

தேயிலை விவசாயி ஊட்டி கொடைக்கானல் நீலகிரி

அதன்படி பயனாளரின் குடும்பத்திற்கு திருமண நிதி உதவிதொகையானது ஆணிற்கு 8000, பெண்ணிற்கு 10000 வழங்கப்படுகிறது. மேலும் உறுப்பினர் உயிரிழந்துவிட்டால் அவர்களுக்கு 20000 தொகையும், இறுதி சடங்கிற்கு 2500  அளிக்கப்படுகிறது.

விவசாயி உதவித்தொகை

இதனை அடுத்து கல்வி நிதி உதவியாக அவர்களுக்கு கல்வியை அவர்களுடைய கல்வி நிலையத்தை  பொறுத்தும் வழங்கப்படுகிறது. மேலும் முதியோர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 65 வருடங்கள் வரை உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த   கூலி வேலை செய்பவர்கள், விவசாயிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் https://www.tnesevai.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?