விவசாயிகள் மகிழ்ச்சி!! 14 வது தவணை பணம் இம்மாதத்திற்குள் விடுவிக்கப்படும்!!

 
விவசாயி உதவித் தொகை

இந்திய விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் அவர்களின் நலன் பேணும் நோக்கத்தில் பிரதமரால் தொடங்கப்பட்ட திட்டம்  கிசான் சம்மான் நிதி திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூ 6,000 வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு  3 தவணையாக  இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் முதல் தவணையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இரண்டாவது தவணையும், டிசம்பர் முதல் மார்ச் மாதத்திற்குள் மூன்றாவது தவணையும் வழங்கப்பட்டு வருகிறது.  இதுவரை  13 தவணைகள் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயி ஒவ்வொருவருக்கும்  இந்த தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது

விவசாயி உதவித்தொகை

இந்நிலையில்,  14வது தவணை மே 26 முதல் 31ம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்  என தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கு முன் 13வது தவணைப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பிப்ரவரி மாதம் டெபாசிட் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்களின் விவரங்களை PM Kisan இணையதளம் மூலம்  அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

விவசாயி உதவித்தொகை
மத்திய அரசு அளிக்கும் தகவல் படி இந்தியா முழுவதும் சுமார் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள்  வங்கி கணக்குகளில் மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி வரை டெபாசிட் செய்துள்ளது. இப்போது அடுத்த தவணையாக சுமார் 16000 கோடியை டெபாசிட் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. கடுமையான நிதிச்சுமைகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதுவரை பதிவு செய்யாதவர்கள் புதிதாக இத்திட்டத்தின் கீழ்   விண்ணப்பிக்க விரும்பினால், PM Kisanன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.கடுமையான நிதிச்சுமைகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web