விவசாயிகள் மகிழ்ச்சி... காவிரி டெல்டா பாசனத்திற்கு 16000 கன அடி தண்ணீர் திறப்பு!

 
வைகை அணை திறப்பு.. 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20000  கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 18,220 கனஅடியாக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.  கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணை

2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம்   நிரம்பும் நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூன் 17ம் தேதி  விநாடிக்கு 10000  கனஅடி வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், கடந்த 18ம் தேதி முதல் கபினியிலிருந்து 25,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை

அதேபோல், 124.80 அடி கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 117.40 அடியாக உயர்ந்திருப்பதால்  அணையில் இருந்து 1201 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரிக்கு வந்தடைந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், மெயினருவி மற்றும் சினிபால்ஸ், ஐந்தருவி உட்பட மற்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை இன்று 2வது நாளாக நீடிக்கிறது.இதனையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது நேற்று காலை 113.58 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.69 அடியாக அதிகரித்துள்ளது.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது