விவசாயிகள் உற்சாகம்!! ரூ1க்கு பயிர்காப்பீடு!! ஆண்டுக்கு ரூ12000 உதவித் தொகை!!

 
விவசாயி உதவித்தொகை

இந்தியாவில் விவசாயம் தான் முக்கியத் தொழில் . மத்திய மாநில அரசுகள் விவசாயத்தை மேம்படுத்தவும், விளைபொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு  உதவுவதற்காக மாநில அரசு நமோ ஷெத்காரி மகாசன்மான் நிதி திட்டத்தை அறிவித்துள்ளது.  இதன் மூலம் மாநில அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6000 செலுத்தப்படும்.  

விவசாயம்

இத்திட்டத்தால் 1.15 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். அதனால் ரூ.6900 கோடி அரசுக்கு நிதி சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே மத்திய அரசு பிரதான் அமைச்சர்  கிருஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000  செலுத்தி வருகிறது. மாநில அரசின் புதிய திட்டத்தால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ12000  உதவித் தொகை கிடைக்கும்.

திருவண்ணாமலையில் ஊரடங்கிலும் தொய்வின்றி தொடரும் விவசாயம்!
அதே போல் மத்திய அரசின்  பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு பிரீமியத்தில் 2 சதவீதத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியத்தை மாநில அரசே செலுத்தும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரதான் மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தில் ரூ.1 மட்டும் செலுத்தி பதிவு செய்தால் போதுமானது. இந்த திட்டத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3312 கோடி நிதி சுமை ஏற்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web