திருச்சியில் மக்காச்சோளத்தை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

 
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பருத்தி மற்றும் மக்காச்சோளத்திற்கு இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தி பருத்தி, மக்காச்சோளத்தை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

தமிழ்நாடு அரசு மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு ரூ 21.50 காசுக்கும், பருத்திக்கு 75 ரூபாயும் தற்போது வழங்கி வருகிறது  படைப்புழு  தாக்குதல் உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.

விவசாயிகள ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் விலையும் குறைவாக வழங்கும் போது கூடுதல் பாதிப்பை தான் விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே பருத்திக்கு 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயும், மக்காச்சோளத்திற்கு 21 ரூபாயிலிருந்து 30 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படைப்புழு மக்காசோளம்

தொடர்ந்து விலையை உயர்த்தி வழங்கினால் மட்டுமே விவசாயிகள் இலாபகரமாப தொகை பெற முடியும் என தெரிவித்து மக்காச்சோளம் மற்றும் பருத்தியை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து கோரிக்கை வைத்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web