திருப்பதி செல்லும் வழியில் கோர விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

 
devotees

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த மோகன் தாஸ் (71), நாகராஜு ராவ் (61), குசுமா (61), ஜெயந்தி (59), பூஜா (33) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து காரில் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். சித்தூர் வழியாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தது.

ஆம்புலன்ஸ்

பெங்களூரு – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பலமனேர் அருகே உள்ள கங்காவரம் மண்டலம் தண்டபல்லி கிராஸ் பகுதியில், அதிவேகமாக வந்த கார் முன்புறம் சென்ற சிமெண்ட் லோடு லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கங்காவரம் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் சிக்கியிருந்த 5 பேரின் உடல்களை மீட்டு பலமனேர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!