தந்தைக்கு மகள் கல்லீரல் தானம்! நீதிமன்றத்தில் போராடி சாதித்த பள்ளி மாணவி!

 
தேவானந்தா

தனது தந்தைக்கு 17 வயது மாணவி, கல்லீரல் தானம் தர முடிவெடுத்த நிலையில், வயதைக் காரணம் காட்டி மறுக்கப்பட்ட நிலையில், சட்டப் போராட்டத்தை நடத்தி, நீதிமன்றத்தை நாடி சாதித்தும் இருக்கிறாள் கேரள மாணவி தேவானந்தா. தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த தேவானந்தா, தனது தந்தை பிரதீஷுக்கு உடல் உறுப்பு தானம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில், வயதைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டது. மருத்துவர்கள் அனுமதி தராமல் மறுத்த நிலையில்,  கேரளா உயர் நீதிமன்றத்தில், தான் உறுப்பு தானம் செய்ய அனுமதி வழங்குமாறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

Kerala

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கல்லீரல் தானம் வழங்க மாணவிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டதோடு, மாணவியை வெகுவாக பாராட்டினார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பிரதீஷுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

இதையடுத்து, தந்தையும், மகளும் பூரணம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமியின் தந்தை தற்போது கல்லீரல் மாற்றப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் கல்லீரல் தானம் செய்து உதவிய தனது மகளை அவர் நெஞ்சாரப் பாராட்டி இருக்கிறார்.

Kerala

இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் இந்தியாவிலேயே சிறு வயதில் தானம் செய்தவர் எந்த பெருமையை மாணவி தேவானந்தா பெற்றிருக்கிறார். இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடல் தானம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web