காதல் திருமணம்… ஆறு மாத கர்ப்பம்… மகளையே அடித்து கொன்ற தந்தை!

 
மான்யா
 

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டம் இனாம் வீரப்பூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது மான்யா, வேறு சமூகத்தை சேர்ந்த விவேகானந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு மான்யாவின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் விவேகானந்தாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, கணவன்-மனைவியாக அவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

ஆம்புலன்ஸ்

மகள் திருமணம் செய்த தகவலை அறிந்த மான்யாவின் தந்தை பிரகாஷ் கௌடா, விவேகானந்தா வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மான்யா ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், நேற்று வழக்கம்போல் அங்கு சென்ற பிரகாஷ் கௌடா மற்றும் அவரது இரண்டு மகன்கள், தகராறு முற்றிய நிலையில் கம்பி மற்றும் கட்டையால் மான்யா உள்ளிட்ட குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.

போலீஸ்

படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணியான மான்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகளையே கொடூரமாக அடித்து கொன்ற தந்தை பிரகாஷ் கௌடாவை கைது செய்தனர். காதல் திருமணத்திற்காக கர்ப்பிணி மகளை கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!