மகள் கண்முன்னே தந்தை கட்டை , கத்தியால் சராமாரியாக கொலை!

 
ஆம்புலன்ஸ்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியில், குடும்பத் தகராறு சாலையோர மோதலாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியை சேர்ந்த ராம்குமார், பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். மனைவி ஜெயந்தியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மகள் ஹரிணி தந்தையுடன் வசித்து வருகிறார்.

ஆம்புலன்ஸ்

நேற்று மாலை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஹரிணியிடம், அவரது தாய் ஜெயந்தியின் தம்பி செந்தில்குமார் மதுபோதையில் தேவையற்ற வார்த்தைகள் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிணி, நடந்த சம்பவத்தை தந்தை ராம்குமாரிடம் தெரிவித்தார்.

போலீஸ்

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராம்குமார், மச்சான் செந்தில்குமாரை கண்டித்த போது, “என் அக்கா மகளிடம் நான் அப்படித்தான் பேசுவேன்” என பதிலளித்து தகராறை மேலும் தீவிரப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து, அது அடிதடியாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!