கொடூரத்தின் உச்சம்... 9 மாதக் குழந்தையைக் கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை!

 
axe axe

 உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த தந்தை, தனது 9 மாதப் பச்சிளம் குழந்தையைக் கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த ஷம்புத்யாயல் கோரி என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்றும் வழக்கம்போல இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஷம்புத்யாயல் தனது மனைவியைக் கொலை செய்யும் நோக்கில் அங்கிருந்த கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவி படுகாயமடைந்தார்.

child

வெறி அடங்காத ஷம்புத்யாயல், தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல் 9 மாதப் பச்சிளம் குழந்தையைக் கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து வந்த போலிஸார், குழந்தையின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

child

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ஷம்புத்யாயலை போலிஸார் உடனடியாகக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஷம்புத்யாயல் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்துப் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரணக் குடும்பச் சண்டையில் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!