கொடூரத்தின் உச்சம்... மனைவி மற்றும் 5 குழந்தைகளைக் கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சார்கோதா மாவட்டத்தில், சந்தேகத்தின் பெயரால் ஒரு நபர் தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளைத் துடிதுடிக்கக் கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாகூரிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த முகமது யாசீன் என்ற நபர், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) நள்ளிரவில் இந்த கோரச் செயலை அரங்கேற்றியுள்ளார். தனது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும், அவருடன் அவர் தப்பிச்செல்லத் திட்டம் தீட்டியதாகவும் முகமது யாசீன் சந்தேகித்துள்ளார்.

இந்தக் கொடூரத்தின் பின்னணியில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. தனது மனைவிக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் தனக்குப் பிறந்தவர்கள் தானா அல்லது அவரது காதலனுக்குப் பிறந்தவர்களா என்ற சந்தேகம் முகமது யாசீனை நீண்ட காலமாக வாட்டி வந்துள்ளது. இந்த உள்ளுணர்வு மற்றும் ஆத்திரத்தின் காரணமாக, வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தனது 45 வயது மனைவி, 15 வயது மகள் மற்றும் 4 மகன்களைக் கோடாரியால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்த பிறகு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால், அவர் உயிர் பிழைத்த நிலையில், தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் 'ஆணவப் படுகொலை' (Honor Killing) என்பது ஒரு தீராத சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்புகளின் தரவுப்படி, அங்கு ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் பெண்கள் இத்தகைய முறையில் கொல்லப்படுகின்றனர். இது போன்ற வழக்குகளில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களே சம்பந்தப்பட்டிருப்பதால், புகார்கள் ஏதுமின்றி உண்மைகள் மறைக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. ஒரு தந்தையே தனது ஐந்து பிள்ளைகளையும் மனைவியையும் சந்தேகத்தின் பெயரால் படுகொலை செய்துள்ள இந்தச் சம்பவம், அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
