அதிர்ச்சி!! OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியிலிருந்து விழுந்து பலி!!

 
ரித்தேஷ் அகர்வால்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ரித்தேஷ் அகர்வால். கடந்த 2012ஆம் ஆண்டு, ஓயோ நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் தொடங்கினார். ஓயோ செயலி மூலம், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விடுதியை புக் செய்யலாம். ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால், குருகிராமில் உள்ள DLF The Crest, Sector 54 அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அங்குள்ள 20ஆவது மாடியில் இருந்து ஒருவர் கீழே விழுந்ததாக மதியம் 1 மணியளவில் குடியிருப்பு பகுதியின் பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். ஆனால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரித்தேஷ் அகர்வால்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாடியில் இருந்து விழுந்த நபர் ரித்தேஷ் அகர்வாலி தந்தை ரமேஷ் பர்சாத் அகர்வால் என அடையாளம் காணப்பட்டது.  இந்த விபத்து நடக்கும் போது மகன் ரித்தேஷ் அக்கவர்வால்,மருமகள் மற்றும் மனைவி ஆகியோர் வீட்டில்தான் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்தது குறித்து ரித்தேஷ் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில், எனது குடும்பத்தினரும் நானும், கனத்த இதயத்துடன், எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த என் தந்தை ரமேஷ் அகர்வால் இன்று காலமானார் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

அவர் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து என்னையும் எங்களில் பலரையும் ஒவ்வொரு நாளும் ஊக்கப்படுத்தினார். அவரது மறைவு எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். எனது தந்தையின் பரிவும் அரவணைப்பும் எங்களின் கடினமான காலங்களில் எங்களை வழி நடத்தியது.அவருடைய வார்த்தைகள் நம் இதயத்தில் ஆழமாக ஒலிக்கும். இந்த துயரமான நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம், என குறிப்பிட்டுள்ளார்.

ரித்தேஷ் அகர்வால்

கடந்த செவ்வாய்கிழமைதான் டெல்லியில் ரித்தேஷ் அகர்வாலுக்குத் திருமணம் நடைபெற்றது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் குடும்பமே இருந்த நிலையில் ரமேஷ் அகர்வால் உயிரிழந்துள்ளது அவர்களது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web