மருத்துவ மாணவியை விஷம் வைத்து தீர்த்து கட்டிய தந்தை... பகீர்!

 
வர்ஷினி
 

சேலம் அருகே சித்தர்கோயில் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவி வர்ஷினி, தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு சென்ற அவர், சில நாட்களுக்கு முன் சேலம் திரும்பியிருந்தார். நேற்று காலை தோழி அறைக்கு வந்தபோது, படுக்கையிலேயே உயிரிழந்த நிலையில் அவர் கிடந்தார்.

தகவலறிந்து வந்த இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி திருநெல்வேலியை சேர்ந்த 40 வயது நபருடன் காதல் உறவில் இருந்ததாகவும், இதற்கு தந்தை வரதராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிய வந்தது. இதனால் வீட்டில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு முந்தைய இரவு தந்தை மகளை சந்தித்து பேசிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அறையின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்ததும், கழுத்தில் லேசான காயம் இருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கொடுத்து அல்லது தலையணையால் மூச்சுத்திணறடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தலைமறைவாக உள்ள தந்தை வரதராஜன் கிடைத்தால் தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!