நெல்லையில் மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.. 7 மாதங்களில் அதிரடி!

 
பலாத்காரம் தூக்கு

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 24, 2025) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றம் நடந்த 7 மாதங்களிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்தச் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே, அவருக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை இழைத்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி 7 மாத கர்ப்பமானார். இந்த அதிர்ச்சித் தகவல் வெளியே தெரிந்ததையடுத்து, நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

நாங்குநேரி பகுதி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பிரசன்ன குமார் தலைமையிலான குழுவினர், மாவட்ட எஸ்பி சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்தனர். குறுகிய காலத்திலேயே வலுவான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் உஷா, பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வலுவான வாதங்களை முன்வைத்தார். 7 மாத கால விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, "பெற்ற மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி, பின்வரும் தண்டனைகளை அறிவித்தார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு 7 மாதங்களுக்குள்ளேயே நீதி கிடைத்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமையும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!