கொடூரம்... தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு... மகன் பலி !

 
அரிவாள் வெட்டு

 தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கருப்பேரி பகுதியில் நரசிம்மன் என்பவர் தனது மகனுடன் வசித்து வந்தார். இவருக்கும் அந்த பகுதியில் வசித்து வரும்  இளைஞர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், அந்த இளைஞர் நரசிம்மனையும், அவரது மகனையும் வெட்டிக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அரிவாளால் தந்தை நரசிம்மன், மற்றும் அவரது மகன் ரவியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார் அந்த இளைஞர். இச்சம்பவத்தில் தந்தை மகன் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நிலையில், அந்த இளைஞர்   தப்பியோடி விட்டதாக தெரிகிறது.  

உத்தரபிரதேச போலீஸ்

இந்த சம்பவத்தில் மகன் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த நரசிம்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web