பெரும் சோகம்... பிக்கப் வாகனம் கவிழ்ந்து தந்தை, மகன் பலி!

 
பிக்கப்

தமிழகத்தில் கோவை மாவட்டம், சிறுமுகை  கூத்தாமண்டி பகுதியில் வசித்து வருபவர் 35 வயது கார்த்திக் பாபு .  இவரது மகன் 5 வயது சாய் மித்திரன்  . கோவை சின்ன தடாகம் எம்.ஜி.ஆர் பகுதியில் வசித்து வருபவர் 20 வயது மந்திராசலம் மகன் குகன். இவர்கள் சிறுமுகை அருகே சென்னம்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக  வந்துள்ளனர்.

பிக்கப் வாகனம்

அங்கு உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தனது 5 வயது மகன் அங்கிருந்து பிக்கப் வாகனத்தில் சுற்றி காட்ட தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது உறவினரின் பிக்கப் வாகனத்தை வாங்கிக் கொண்டு கார்த்திக் பாபு, மகன் சாய் மித்ரன் மற்றும் குகன் ஆகியோர் பிக்கப் வாகனத்தில் சென்றுள்ளனர்.  சென்னம்பாளையத்தில் இருந்து வெள்ளிகுப்பம் பாளையம் வரை சென்று அங்கிருந்து தொட்டபாவி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது.  அந்த சாலையில் வளைவு ஒன்றில் திரும்ப முயன்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாய் மித்ரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.  

ஆம்புலன்ஸ்

மேலும் படுகாயம் அடைந்த நிலையில் கார்த்திக் பாபு, குகன் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் கார்த்திக் பாபு சிகிச்சை பலனின்றி  பலியானார். மேலும் குகன் என்பவர் காயமடைந்து  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web