பெரும் சோகம்... கட்டில் உடைந்து தந்தை மகன் பலி!
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டையில் வசித்து வருபவர் கண்ணன். இவர் வழக்கம் போல் வீட்டில் உள்ள இரும்பு கட்டிலில் தனது 10 வயது மகன் கார்த்திக்குடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த இரும்பு கட்டிலின் ஒரு பக்க கம்பிகள் முறிந்து கட்டில் கீழ்நோக்கி சரிந்து விட்டது. அந்த சமயத்தில் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த கண்ணன் மற்றும் அவரது மகன் கார்த்திக் கழுத்தை அந்த இரும்பு கட்டிலின் கம்பி நெரித்ததில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த கண்ணன் மற்றும் அவரது மகன் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மற்றும் மமன் கட்டிலின் ஒருபக்க கம்பி உடைந்ததில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சுற்று வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!