மகளை பள்ளியில் விட்ட நொடியில் தந்தைக்கு மாரடைப்பு… பள்ளி வாசலில் உயிர் பிரிந்த சோகம்!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தசகர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நபர், நேற்று காலை தனது மகளை வழக்கம்போல் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு வீடு திரும்பத் தயாரானார். பள்ளி வாசலிலேயே நின்றிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
बुलंदशहर में बेटी को स्कूल छोड़ने आए युवक की हार्ट अटैक मौत, सीने में उठा दर्द, बैठे-बैठे तोड़ा दम... pic.twitter.com/78rSqWOrom
— Article19 India (@Article19_India) December 22, 2025
மயக்கம் என நினைத்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மனைவி மற்றும் மகளைப் பிரிந்து தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பள்ளி வாசலில் நடந்த இந்த திடீர் மரணம் பலரையும் கலங்கடித்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
