பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை!

 
தூக்கு தண்டனை
 

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே, 49 வயது தொழிலாளி தனது 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், கடந்த பிப்ரவரியில் அவரது தாய் நான்குனேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

கர்ப்பம்

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் மேற்கொண்ட நடவடிக்கையின்படி, அந்த தொழிலாளி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் குற்றத்தை உறுதி செய்ததாக கூறி, இது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம் எனத் தெரிவித்தார். இதையடுத்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.25,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமும் வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!