மகள்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சித்ரவதை செய்த தந்தை... கொடூரத்தால் 10 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

 
உபி உபி

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள பன்புரி கிராமத்தில், பெற்ற தந்தையே தனது இரு மகள்களைச் சித்திரவதை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நானா ஹைபத் யம்கர் என்ற அந்த நபர், பக்கத்து வீட்டில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் தனது மகள்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் 10 வயது ரிதுஜா மற்றும் 11 வயது அனுஜா ஆகிய இரு சிறுமிகளின் கை, கால்களைக் கட்டி, வீட்டின் இரும்புச் சட்டத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இரவு முழுவதும் தலைகீழாகத் தொங்கியபடி வலியால் துடித்த அந்தச் சிறுமிகள், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு கதறியும் அந்தத் தந்தை எவ்வித இரக்கமும் காட்டாமல் உறங்கச் சென்றுள்ளார். பல மணிநேர வேதனையைத் தாங்க முடியாமல் 10 வயதுச் சிறுமி ரிதுஜா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த தாத்தா, ஒரு பேத்தி உயிரிழந்து கிடப்பதையும் மற்றொருவர் மயக்க நிலையில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி அனுஜா, நினைவு திரும்பியதும் தனது தந்தை செய்த கொடூரச் செயல்களைக் கண்ணீருடன் மருத்துவர்களிடம் விவரித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் நானா ஹைபத் யம்கரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வெறும் சந்தேகத்திற்காகச் சொந்தக் குழந்தைகளையே சித்திரவதை செய்து ஒரு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!