கதறும் பெற்றோர்... நீட் எழுதின பிறகு பயம்... பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
நீட்

 

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் ஜங்க பூஜா என்பவர் வசித்து வருகிறார்.

நீட் நுழைவுத்  தேர்வு


இவர்  2023 ம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில் தேர்ச்சி பெறவில்லை. இதை தொடர்ந்து சிறப்பு வகுப்பில் பயிற்சி பெற்று வந்த இவர் இந்த வருடம் தேர்வை எழுதினார். பின்னர் வீட்டிற்கு வந்து மதிப்பெண்களை சரிபார்த்த போது எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது என எண்ணினார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


இதைப் போன்று தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் ராயி மனோஜ் குமார் என்பவர் நீட் தேர்வை சரியாக எழுதாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்துவதற்காக உதவி செல்போன் எண்களை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.இந்த செல்போன் எண்கள் மூலம் மாணவர்கள் மனநல நிபுணரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web