பிப்.12 நாடு முழுவதும் வேலைநிறுத்தம்?! அரசு ஊழியர்கள் விரக்தி!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சூழலில், நாடு தழுவிய வேலைநிறுத்த அறிவிப்பை மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CCGEW) இந்த வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான முக்கியக் காரணம், 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைப்பதில் நிலவும் காலதாமதம் மற்றும் அதன் விதிமுறைகளில் ஊழியர்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவது தான்.

ஊழியர்களின் 7 முக்கியக் கோரிக்கைகள்
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். அதுவரை 20% இடைக்கால நிவாரணம் ஜனவரி 1, 2026 முதல் வழங்கப்பட வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே (OPS) அமல்படுத்த வேண்டும்.
50 சதவீத அகவிலைப்படியை (DA) அடிப்படைச் சம்பளத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும்.
உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்குக் காருண்ய அடிப்படையில் பணி வழங்குவதில் உள்ள 5% உச்சவரம்பை நீக்கி, தகுதியுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும்.
தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

நாடு தழுவிய தாக்கம்
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ரயில்வே, தபால் துறை, வருமான வரித்துறை மற்றும் பல்வேறு மத்திய அரசுத் துறை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் என்றாலும், தபால் மற்றும் நிர்வாக அலுவலகப் பணிகள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே வாரத்தில் 5 நாள் வேலை கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வரும் வங்கி ஊழியர் சங்கங்களும் இப்போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
