பொது இடங்களில் கட்சி கொடி கம்பம் வைக்க ரூ.1000/- கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி !

 
கட்சிக் கொடி


 
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி இளந்திரியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

 

கட்சிக் கொடி
இதன்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

கொடிமரங்கள், கட்சி கொடிகள்
இந்நிலையில் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் புதிதாக கொடி கம்பம் வைக்க ஒவ்வொரு கம்பத்துக்கும் ரூ1000 கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஜூலை 2ம் தேதிக்குள்  கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது