பெண் இன்ஸ்பெக்டர் அடாவடி... புகாரை வாபஸ் பெற கூறி இளம்பெண்ணுக்கு மிரட்டல்!

 
குற்றம்

விருதுநகர்  மாவட்டம் ராஜபாளையத்தில் நகை மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய புகாரில், பெண் இன்ஸ்பெக்டர் சத்யசீலா மற்றும் அவரது கூட்டாளி ராம்குமார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

செட்டியார்பட்டியைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் 33 பவுன் நகையை மோசடி செய்ததாக ராம்குமார் என்பவர் கடந்த 2023-ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை வாபஸ் பெற மாலதியை ராம்குமார் மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், சத்யசீலா என்பவர் மாலதியைத் தொடர்பு கொண்டு, "நானும் ராம்குமாரால் ஏமாற்றப்பட்டேன்; என்னுடன் வந்தால் நகையை மீட்டுத் தருகிறேன்" என ஆசை காட்டி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவழைத்துள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

அங்கு சென்ற மாலதியை, ராம்குமாரும் சத்யசீலாவும் இணைந்து புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாலதி, தளவாய்புரம் போலீசில் புகார் அளித்தார்.

சத்யசீலாவின் பின்னணி குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்தவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் ராம்குமாருடன் சேர்ந்து ஏற்கனவே கைதானவர். அந்த வழக்கை அடுத்து அவர் காவல்துறையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!