போலீஸ் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை... பரபரப்பு!
சென்னையில் டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் 30 வயது கார்த்திகா ராணி . சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர், மணிவண்ணன். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு காரணமாக 2019லிருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது 2 குழந்தைகளும், கார்த்திகா ராணியின் பெற்றோரிடம் உள்ளனர்.

கணவர் மணிவண்ணன் பெங்களூருவில் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். நவம்பர் 23ம் தேதி இரவு கார்த்திகா ராணி தனது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று கார்த்திகா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கணவர் பிரிந்து சென்றதால் ஏற்கனவே பல மாதங்களாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இதனாலேயே தனியாக வசித்து வந்தார். இந்த மன அழுத்தம் காரணமாக கார்த்திகா ராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
