சிரிப்புடன் மரணத்தை வரவேற்ற பெண் தற்கொலைப்படை போராளி... அதிர வைக்கும் வீடியோ வைரல்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ‘ஆபரேஷன் ஹெரோப்-2’ என்ற பெயரில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாக நீடித்து வரும் இந்த மோதல் பாதுகாப்பு சூழ்நிலையை மோசமாக்கியுள்ளது.
Baloch Liberation Army Video:
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) February 2, 2026
“During Operation Herof, Phase Two at the Gwadar Front, Fidayee Hawa Baloch fought selflessly, shoulder to shoulder with fellow Fidayeen. This was her final message, sent twelve hours before her martyrdom.” pic.twitter.com/tedajNIjkD
இந்த நிலையில், ஹாவா பலோச் என்ற பெண் தற்கொலைப்படை போராளியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதலுக்கு முன் அவர் புன்னகையுடன் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. கையில் நவீன ரக துப்பாக்கியுடன் இருந்த அவர், பாகிஸ்தான் ராணுவத்தினரை நேருக்கு நேர் சந்திக்கத் தயார் என கூறியுள்ளார். மேலும் பலுச் பெண்களும் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மோதலில் பல ராணுவத்தினர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலின் இறுதியில் ஹாவா பலோச் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பலுசிஸ்தான் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
