ஃபெமினா ஜார்ஜின் உடற்பயிற்சி வீடியோ வைரல்!
மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட உடற்பயிற்சி விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லெக் ஸ்டிராட்டில் எனப்படும் கால்களை விரிக்கும் பயிற்சியை செய்யும் போது வலியால் கத்தும் அந்த வீடியோ, 3.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
பாசில் ஜோசப் இயக்கி 2021-ல் வெளியான **மின்னல் முரளி** படத்தில் நாயகியாக அறிமுகமான ஃபெமினா ஜார்ஜ், தற்போது 28 வயதாகிறார். இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்த இவர், பட வாய்ப்புகள் குறைவதால் உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு **கரக்கம்** என்ற படத்தில் நடித்து வருவதாகவும் பதிவிட்டிருந்தார்.
அவர் இன்ஸ்டாவில் பல பாக்ஸிங் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்துள்ளார். லெக் ஸ்டிராட்டில் பயிற்சி செய்யும்போது பயிற்சியாளர் அவரது கால்களை அதிகமாக நீட்டும் போது வலியால் “போதும் போதும்” என கத்துவதை வீடியோவில் காட்டியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
